Selva

Selva
Kodai Tour

Monday 28 February 2011

மத்திய பொது பட்ஜெட் 2011 - 2012

மத்திய பொது பட்ஜெட் 2011 - 2012



மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பின்வரும் விகடன் குழுமத்தின் இணைய முகவரியில் தெரிந்து கொள்ளுங்கள் . நன்றி !


அல்லது பின்வரும் இந்திய அரசின் இணைய தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் காணலாம் .
http://india.gov.in/events/budget2011.php

மேலும் ரயில்வே பட்ஜெட்டுக்கு (ஆங்கிலத்தில் )





தென்னக இரயில்வேயின் புதிய இணையதளம் 

நன்றி !!
அன்புடன்,
கே.செல்வா.  

Saturday 26 February 2011

இந்த வார இணையதளம் 1 - Money Manager

இந்த வார இணையதளம் 1  

Money Manager
                                   இந்த மென்பொருள் இணைய இணைப்பு இருந்தால் வேலை செய்யும். நம்முடைய கணக்குகளை முற்றிலும் இலவசமாக செயல் படுத்துகிறது. இதனை இலவசமாக தருபவர்கள் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 
முயன்று பாருங்கள்.
இணையதள முகவரி :  www.codelathe.com/mmex     

நன்றி: புதிய தலைமுறை வார இதழ்  

அன்புடன் ,
கே. செல்வா...  

இந்த மாத நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி 2011

இந்த மாத நிகழ்ச்சி - நாட்டியாஞ்சலி 2011  
 நாட்டியாஞ்சலி 2011  

இடம் : நடராஜர் ஆலயம், சிதம்பரம் 
துவக்க நாள் :  02.03.2011 - மாலை 6 மணி முதல்   
                              காலை 6  மணி வரை (முதல் நாள்  மட்டும்) 
                                            
                        
பல நடன கலைஞர்கள் பல்வேறு நடனங்களை நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அதனால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு இசை மற்றும் நடன கலைஞர்கள் வருடந்தோறும் 5 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நாட்டியஞ்சலிக்கு பெருமை சேர்ப்பார்கள். அனைவரும் வாருங்கள் ! நாட்டியாஞ்சலியை காணுங்கள் !!



  • சென்னை, புதுச்சேரி, சேலம்,நெய்வேலி, வடலூர்,விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் கீழ வீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும்  நாட்டியாஞ்சலியை காணலாம்.          



  • மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகை, சிர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம்  தெற்கு வீதி பேருந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கு சன்னதி வழியாக தெற்கு கோபுரத்தில் நுழைந்து  கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.              



   
Add caption
உதவிக்கு நாடுங்கள் : 97888 86003
அன்புடன் ,
கே. செல்வா 

Saturday 19 February 2011

இந்த வார செய்தி

இந்த வார செய்தி 

                                         இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது . தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது, பாரத பிரதமர் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதும் நமக்கு சாதாரண செய்தியாகி விட்டது . அதிலும் இப்பொழுது அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிகொண்டு போராட்டம் நடத்துவது ஆதித்யா தொலைக்காட்சியில் வரும் நகைச்சுவையை தாண்டிவிட்டது. இந்த சில மாதங்களாக  தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் அவதி படுகிறார்களோ?.அதற்கு முன்பு ? . இல்லை ஏனென்றால் தேர்தல் வருகிறது ! இன்னும் எவ்வளவு நடக்க போகிறதோ ? அதற்குத்தான் அண்ணா அன்றே எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சொன்னாரோ ! . சரி சரி அனைத்து கட்சியனரும் அவர்களது நகைச்சுவையை நடத்தட்டும். சிரித்து கொண்டே இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும் என்பது மருத்துவ அறிவுரை. அரசியல் கட்சியனருக்கு சுய நலத்திலும் ஒரு பொதுநலம். மக்களை சிரிக்க வைக்கிறார்கள் . தமிழக மக்களே ! நமக்கு நிறைய வேலை இருக்கிறது.தினம் ஒரு செய்தி வரும் .அதனை உட்கார்ந்து வெட்டி கதை பேச வேண்டும் .  உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. நாம் அதை தெருவில் நின்று ஸ்கோர் பார்க்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் வீரர்கள் கோடி கோடிகளாக சம்பாதிப்பார்கள். அரசியல்வாதிகள் மட்டும் சம்பாதித்தால் போதுமா? யாராவது எப்படியாவது போகிறார்கள் .  நாம் சந்தோசமாக இருப்போம் .  என்ன சரிதானே ?                                                                                                                                        ( அது சரி எகிப்தில் என்னவோ புரட்சி நடக்கிறதாமே ! வேலை இல்லாதவர்கள் !! )   -- கே. செல்வா ...

Friday 18 February 2011

இந்த வார / மாத சினிமா - யுத்தம் செய்

யுத்தம் செய்
இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத்தினர் செல்வாக்கு மிக்கவர்களால் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அலசுகிறது . நடுத்தர வர்க்கத்தினர் பொறுமையின் எல்லை தாண்டி பழிக்கு பழி வாங்குகிறார்கள் . இந்த திரைப்படத்தில் சேரன் மற்றும் சக நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள் . இந்த திரைப்படத்திற்கு சத்யாவின் ஒளிப்பதிவும், கே ( கிருஷ்ணமூர்த்தி )வின் இசையும் பக்க பலமாக உள்ளது . முடிவாக மிஸ்கின் நல்ல ஒரு சமுதாய கருத்துள்ள திரைப்படத்தை தந்துள்ளார் .                                 கே.செல்வா .....