Selva

Selva
Kodai Tour

Saturday 4 June 2011

குழந்தை - கண்ணுக்கு தெரியும் கடவுள்

குழந்தை - கண்ணுக்கு தெரியும் கடவுள் 


          குழந்தை ஒரு கடவுள். அதற்கு நல்லது , கெட்டது தெரியாது. அந்த பருவம் நல்ல பருவம். குழந்தை வளர வளர நல்லது ,கெட்டது தெரிகிறது. சூழ்நிலை நம்மை மாற்றுகிறது. நமக்குள் சுயநலம், பொய் அனைத்தும் வருகிறது. அதனால் குழந்தை பருவம் அனைவரும் போற்ற வேண்டிய பருவம். 



          குழந்தைகளை கொஞ்சுங்கள். குழந்தைகளாக மாறுங்கள்.  குழந்தை நமக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்பத்தை கொடுக்கிறது.






குறிப்பு : எனக்கு 02.06.2011 அன்று குழந்தை பிறந்துள்ளது 
அன்புடன் 
கே.செல்வா...  
         

Tuesday 31 May 2011

என்னை பாதித்த (டாக்டர் .கே .சொக்கலிங்கம் அவர்களின் ) மரணம்

என்னை பாதித்த டாக்டர் .கே .சொக்கலிங்கம் அவர்களின்  மரணம் 
                                                     
                                                                         
                                                          
மே 30, 2011  - கருப்பு ஞாயிறு  

    நான் பணிபுரியும்  மருத்துவமனையின்   துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.கே.சொக்கலிங்கம் அவர்கள் சாலை விபத்தில் (மே 30,2011)அகால மரணமடைந்தார்.
அவர் பணிவானவர். கனிவானவர் . தட்டி கொடுத்து வேலை வாங்குவார்.   
     காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் . மரணத்துக்கும் கண் இல்லை. ஆண், பெண் , குழந்தை , நல்லவர் மற்றும் கெட்டவர் யாரும் மரணத்திற்கு தெரிவதில்லை.

   மனிதர்களே ! மரணம் என்பது மனிதனுக்கு, இயற்கை  கொடுக்கும் எச்சரிக்கை. நம் அனைவருக்கும் மரணம் உண்டு . அதனை மனதில் கொண்டு நாம்  வாழும் காலத்தில் யாருக்கும் கெடுதல் செய்யாமல் வாழ வேண்டும் . நாம் நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும். நம்முடைய மரணம் மற்றவர்களை பாதிக்க வேண்டும் .       
கண்ணீருடன் , 
கே.செல்வா.. 
  

Wednesday 2 March 2011

நாட்டியாஞ்சலி 2011 நிகழ்ச்சிகள் 







அன்புடன், 
கே. செல்வா... 

Monday 28 February 2011

மத்திய பொது பட்ஜெட் 2011 - 2012

மத்திய பொது பட்ஜெட் 2011 - 2012



மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பின்வரும் விகடன் குழுமத்தின் இணைய முகவரியில் தெரிந்து கொள்ளுங்கள் . நன்றி !


அல்லது பின்வரும் இந்திய அரசின் இணைய தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் காணலாம் .
http://india.gov.in/events/budget2011.php

மேலும் ரயில்வே பட்ஜெட்டுக்கு (ஆங்கிலத்தில் )





தென்னக இரயில்வேயின் புதிய இணையதளம் 

நன்றி !!
அன்புடன்,
கே.செல்வா.  

Saturday 26 February 2011

இந்த வார இணையதளம் 1 - Money Manager

இந்த வார இணையதளம் 1  

Money Manager
                                   இந்த மென்பொருள் இணைய இணைப்பு இருந்தால் வேலை செய்யும். நம்முடைய கணக்குகளை முற்றிலும் இலவசமாக செயல் படுத்துகிறது. இதனை இலவசமாக தருபவர்கள் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 
முயன்று பாருங்கள்.
இணையதள முகவரி :  www.codelathe.com/mmex     

நன்றி: புதிய தலைமுறை வார இதழ்  

அன்புடன் ,
கே. செல்வா...  

இந்த மாத நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி 2011

இந்த மாத நிகழ்ச்சி - நாட்டியாஞ்சலி 2011  
 நாட்டியாஞ்சலி 2011  

இடம் : நடராஜர் ஆலயம், சிதம்பரம் 
துவக்க நாள் :  02.03.2011 - மாலை 6 மணி முதல்   
                              காலை 6  மணி வரை (முதல் நாள்  மட்டும்) 
                                            
                        
பல நடன கலைஞர்கள் பல்வேறு நடனங்களை நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அதனால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு இசை மற்றும் நடன கலைஞர்கள் வருடந்தோறும் 5 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நாட்டியஞ்சலிக்கு பெருமை சேர்ப்பார்கள். அனைவரும் வாருங்கள் ! நாட்டியாஞ்சலியை காணுங்கள் !!



  • சென்னை, புதுச்சேரி, சேலம்,நெய்வேலி, வடலூர்,விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் கீழ வீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும்  நாட்டியாஞ்சலியை காணலாம்.          



  • மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகை, சிர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம்  தெற்கு வீதி பேருந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கு சன்னதி வழியாக தெற்கு கோபுரத்தில் நுழைந்து  கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.              



   
Add caption
உதவிக்கு நாடுங்கள் : 97888 86003
அன்புடன் ,
கே. செல்வா