Selva
Kodai Tour
Tuesday, 27 December 2011
Saturday, 4 June 2011
குழந்தை - கண்ணுக்கு தெரியும் கடவுள்
குழந்தை ஒரு கடவுள். அதற்கு நல்லது , கெட்டது தெரியாது. அந்த பருவம் நல்ல பருவம். குழந்தை வளர வளர நல்லது ,கெட்டது தெரிகிறது. சூழ்நிலை நம்மை மாற்றுகிறது. நமக்குள் சுயநலம், பொய் அனைத்தும் வருகிறது. அதனால் குழந்தை பருவம் அனைவரும் போற்ற வேண்டிய பருவம்.
குழந்தைகளை கொஞ்சுங்கள். குழந்தைகளாக மாறுங்கள். குழந்தை நமக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்பத்தை கொடுக்கிறது.
குறிப்பு : எனக்கு 02.06.2011 அன்று குழந்தை பிறந்துள்ளது
அன்புடன்
கே.செல்வா...
Tuesday, 31 May 2011
என்னை பாதித்த (டாக்டர் .கே .சொக்கலிங்கம் அவர்களின் ) மரணம்
என்னை பாதித்த டாக்டர் .கே .சொக்கலிங்கம் அவர்களின் மரணம்
நான் பணிபுரியும் மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.கே.சொக்கலிங்கம் அவர்கள் சாலை விபத்தில் (மே 30,2011)அகால மரணமடைந்தார்.
அவர் பணிவானவர். கனிவானவர் . தட்டி கொடுத்து வேலை வாங்குவார்.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் . மரணத்துக்கும் கண் இல்லை. ஆண், பெண் , குழந்தை , நல்லவர் மற்றும் கெட்டவர் யாரும் மரணத்திற்கு தெரிவதில்லை.
மனிதர்களே ! மரணம் என்பது மனிதனுக்கு, இயற்கை கொடுக்கும் எச்சரிக்கை. நம் அனைவருக்கும் மரணம் உண்டு . அதனை மனதில் கொண்டு நாம் வாழும் காலத்தில் யாருக்கும் கெடுதல் செய்யாமல் வாழ வேண்டும் . நாம் நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும். நம்முடைய மரணம் மற்றவர்களை பாதிக்க வேண்டும் .
கண்ணீருடன் ,
கே.செல்வா..
Monday, 28 February 2011
மத்திய பொது பட்ஜெட் 2011 - 2012
மத்திய பொது பட்ஜெட் 2011 - 2012
மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பின்வரும் விகடன் குழுமத்தின் இணைய முகவரியில் தெரிந்து கொள்ளுங்கள் . நன்றி !
அல்லது பின்வரும் இந்திய அரசின் இணைய தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் காணலாம் .
http://india.gov.in/events/budget2011.phpமேலும் ரயில்வே பட்ஜெட்டுக்கு (ஆங்கிலத்தில் )


Saturday, 26 February 2011
இந்த வார இணையதளம் 1 - Money Manager
இந்த வார இணையதளம் 1
Money Manager
இந்த மென்பொருள் இணைய இணைப்பு இருந்தால் வேலை செய்யும். நம்முடைய கணக்குகளை முற்றிலும் இலவசமாக செயல் படுத்துகிறது. இதனை இலவசமாக தருபவர்கள் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
முயன்று பாருங்கள்.
இணையதள முகவரி : www.codelathe.com/mmex
நன்றி: புதிய தலைமுறை வார இதழ்
அன்புடன் ,
கே. செல்வா...
இந்த மாத நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி 2011
இந்த மாத நிகழ்ச்சி - நாட்டியாஞ்சலி 2011
இடம் : நடராஜர் ஆலயம், சிதம்பரம்
துவக்க நாள் : 02.03.2011 - மாலை 6 மணி முதல்
காலை 6 மணி வரை (முதல் நாள் மட்டும்)
பல நடன கலைஞர்கள் பல்வேறு நடனங்களை நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்வார்கள். அதனால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு இசை மற்றும் நடன கலைஞர்கள் வருடந்தோறும் 5 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நாட்டியஞ்சலிக்கு பெருமை சேர்ப்பார்கள். அனைவரும் வாருங்கள் ! நாட்டியாஞ்சலியை காணுங்கள் !!
- சென்னை, புதுச்சேரி, சேலம்,நெய்வேலி, வடலூர்,விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் கீழ வீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.
- மதுரை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகை, சிர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள், சிதம்பரம் தெற்கு வீதி பேருந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கு சன்னதி வழியாக தெற்கு கோபுரத்தில் நுழைந்து கீழ கோபுர வாசல் அருகில் நடைபெறும் நாட்டியாஞ்சலியை காணலாம்.
Saturday, 19 February 2011
இந்த வார செய்தி
இந்த வார செய்தி
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது . தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது, பாரத பிரதமர் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதும் நமக்கு சாதாரண செய்தியாகி விட்டது . அதிலும் இப்பொழுது அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிகொண்டு போராட்டம் நடத்துவது ஆதித்யா தொலைக்காட்சியில் வரும் நகைச்சுவையை தாண்டிவிட்டது. இந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் அவதி படுகிறார்களோ?.அதற்கு முன்பு ? . இல்லை ஏனென்றால் தேர்தல் வருகிறது ! இன்னும் எவ்வளவு நடக்க போகிறதோ ? அதற்குத்தான் அண்ணா அன்றே எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சொன்னாரோ ! . சரி சரி அனைத்து கட்சியனரும் அவர்களது நகைச்சுவையை நடத்தட்டும். சிரித்து கொண்டே இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும் என்பது மருத்துவ அறிவுரை. அரசியல் கட்சியனருக்கு சுய நலத்திலும் ஒரு பொதுநலம். மக்களை சிரிக்க வைக்கிறார்கள் . தமிழக மக்களே ! நமக்கு நிறைய வேலை இருக்கிறது.தினம் ஒரு செய்தி வரும் .அதனை உட்கார்ந்து வெட்டி கதை பேச வேண்டும் . உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. நாம் அதை தெருவில் நின்று ஸ்கோர் பார்க்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் வீரர்கள் கோடி கோடிகளாக சம்பாதிப்பார்கள். அரசியல்வாதிகள் மட்டும் சம்பாதித்தால் போதுமா? யாராவது எப்படியாவது போகிறார்கள் . நாம் சந்தோசமாக இருப்போம் . என்ன சரிதானே ? ( அது சரி எகிப்தில் என்னவோ புரட்சி நடக்கிறதாமே ! வேலை இல்லாதவர்கள் !! ) -- கே. செல்வா ...
Friday, 18 February 2011
இந்த வார / மாத சினிமா - யுத்தம் செய்
இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத்தினர் செல்வாக்கு மிக்கவர்களால் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அலசுகிறது . நடுத்தர வர்க்கத்தினர் பொறுமையின் எல்லை தாண்டி பழிக்கு பழி வாங்குகிறார்கள் . இந்த திரைப்படத்தில் சேரன் மற்றும் சக நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள் . இந்த திரைப்படத்திற்கு சத்யாவின் ஒளிப்பதிவும், கே ( கிருஷ்ணமூர்த்தி )வின் இசையும் பக்க பலமாக உள்ளது . முடிவாக மிஸ்கின் நல்ல ஒரு சமுதாய கருத்துள்ள திரைப்படத்தை தந்துள்ளார் . கே.செல்வா .....
Subscribe to:
Comments (Atom)























